இன்று காலை தெலுக் இந்தான் சிகுஸ் (Chikus)-சுங்கை லம்பாம் (Sungai Lampam) சாலையில் நடந்த விபத்தில் எட்டு ஃபெடரல் ரிசர்வ் யூனிட் (Federal Reserve Unit) உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.
இந்த சாலை விபத்தில் கல் ஏற்றி வந்த ஒரு லோரியும், 15 உறுப்பினர்களுடன் சென்ற FRU வாகனமும் மோதிக்கொண்டதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் சயானி சைடொன் (Sayani Saidon) தெரிவித்தார்.
இந்த சம்பவம் காலை 8.30 மணியளவில் நடந்ததாகவும் தற்போது எட்டுபேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட சிலர் தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.









