லங்காவியில் 10 மீட்டர் உயரமுள்ள கடற்கரைப் பகுதியின் பள்ளத்தாக்கில் காருடன் பெண் விழுந்ததில் காயம்

இன்று காலை லங்காவி தெலுக் யூவில் (Teluk Yu) சுமார் 10 மீட்டர் உயரமுள்ள கடற்கரைப் பகுதியின் பள்ளத்தாக்கில் காருடன் பெண் விழுந்ததில் காயமடைந்தார்.

22 வயதுடைய அந்த பெண், ஹோட்டலுக்கு வேலைக்காக செல்லும் போது, பெரோடுவா ஆக்சியா (Perodua Axia) கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. பின்னர் கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட அப்பெண் சொற்ப காயங்களுடன் சுல்தானா மாலிகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here