கணவன் மனைவியை மோதிய நிசான் நவாரா வாகன ஓட்டுநர் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் அல்ல என்பது உறுதி

கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய நெடுஞ்சாலை, NKVE-இல், கடந்த சனிக்கிழமை மோட்டார்சைக்கிளில் பயணித்த கணவன் மனைவியை மோதிய நிசான் நவாரா வாகன ஓட்டுநர் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் அல்ல என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர், போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்க துறை தலைவர் Asisten Komisioner முஹமட் சம்சூரி முஹமட் இசா, வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

விசாரணை அறிக்கை விரைவில் அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் தற்போது சுயநினைவற்ற நிலையில், சுங்கை பூலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தின்போது சம்பந்தப்பட்ட வாகனத்தைத் தாம் செலுத்தவில்லை என்று அதன் உரிமையாளர் காணொளி ஒன்றின் வழி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ, தகவல் தெரிந்தவர்கள் தொடர்புக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here