கோலாலம்பூர்:
புத்ராஜெயாவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்து, இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
புத்ராஜெயா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர், இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ஒரு குழந்தையை அவரது தந்தை அழைத்து வந்ததாகக் கூறி, பிற்பகல் 2.24 மணிக்கு காவல்துறையில் புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஆனால் மருத்துவ ஊழியர்களின் பரிசோதனைக்குப் பிறகு, குறித்த குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று, புத்ராஜெயா காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஐடி ஷாம் முகமட் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
“முதற்கட்ட விசாரணையில் குழந்தை குடியிருப்பு கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்தது கண்டறியப்பட்டது.
“நாளை காலை 8 மணிக்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்றும், மேலும் இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.























