ஆசியான் உச்சநிலை மாநாடு: 6 கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைகள். 25 பிரதான சாலைகள் மூடப்படும்

கோலாலம்பூர், 

ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை முதல் மே 28ஆம் தேதி வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆறு நெடுஞ்சாலைகளும் 25 பிரதான சாலைகளும் மூடப்படும் என்று புக்கிட் அமான் வாகனப் போக்குவரத்து புலன் விசாரணை, அமலாக்க இலாகா இயக்குநர் டத்தோஸ்ரீ யுஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்.

மூடப்படும் சாலைகளில் கேஎல்ஐஏ. கேஎல்சிசி. இஸ்தானா நெகாரா, சில முக்கிய ஹோட்டல்கள் ஆகியவற்றுக்கான பாதைகளும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை – மே 26 (காலை 7.00 மணி முதல் அனைத்துப் பேராளர்களும் கட்டங்கட்டமாக வந்தடையும் வரை).

கேஎல்ஐஏ துரித நெடுஞ்சாலை, வடக்கு – தெற்கு துரித நெடுஞ்சாலை சென்ட்ரல் லிங்க் (எலிட்). (கேஎல்ஐஏ – புத்ராஜெயா). நியூ கிளாங் வேலி விரைவு நெடுஞ்சாலை (என்கேவிஇ) (சுபாங் – ஜாலான் டூத்தா). கத்ரி கோரிடோர் துரித நெடுஞ்சாலை, வடக்கு – தெற்கு துரித நெடுஞ்சாலை (பிளஸ்) (சுங்கை பூலோ – ஜாலான் டூத்தா). மாஜுதுரித நெடுஞ்சாலை (மெக்ஸ்), கோலாலம்பூர் – சிரம்பான்துரித நெடுஞ்சாலை (சுங்கை பீசி மாநகர் மையப்பகுதி).
லிங்காரான் புத்ராஜெயா, ஜாலான் இஸ்தானா, ஜாலான் டாமன்சாரா. ஜாலான் துன் ரசாக், ஜாலான் அம்பாங். ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் இம்பி, ஜாலான் பார்லிமென்ட், ஜாலான் கூச்சிங்.
மே 26 (காலை 8.00 மணியிலிருந்து பிரமுகர்கள் முழுமையாக வந்தடையும் வரை): மாலை 5.30 மணியிலிருந்து பிரமுகர்களின் வருகை முடியும் வரை: இரவு 7.00 பிரமுகர்கள் வருகை முழுமைபெறும் வரையில்.

ஜாலான் அம்பாங் – ஜாலான் பி. ரம்லி சந்திப்பு. ஜாலான் சுல்தான் இஸ்மாயில் ஜாலான் பி. ரம்லி சந்திப்பு, ஜாலான் பேராக் – ஜாலான் பி. ரம்லி சாலைச் சந்திப்பு. ஜாலான் பேராக் – ஜாலான் பினாங் சந்திப்பு, ஜாலான் ஸ்டோனர் – ஜாலான் கியா பெங் சந்திப்பு. ஜாலான் ஸ்டோனர் – பெர்சியாரான் கேஎல்சிசி.
மே 27 (காலை 8.00 மணி முதல் காலை 10.30 மணி வரை). ஜாலான் அம்பாங் ஜாலான் பி. ரம்லி சந்திப்பு. ஜாலான் சுல்தான் இஸ்மாயில் ஜாலான் பி. ரம்லி சந்திப்பு. ஜாலான் பேராக் – ஜாலான் பி. ரம்லி சந்திப்பு. ஜாலான் பேராக் ஜாலான் பினாங் சந்திப்பு. ஜாலான் ஸ்டோனர் – ஜாலான் கியா பெங் சந்திப்பு. ஜாலான் ஸ்டோனர் பெர்சியாரான் கேஎல்சிசி சந்திப்பு.

மே 27 (காலை 11.45 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணி வரை.) ஜாலான் துன் ரசாக், ஜாலான் மகா மேரு. ஜாலான் சுல்தான் அப்துல் ஹலிம்.
மே 27 (பிற்பகல் 1.45 மணியிலிருந்து மதியம் 3.00 மணி வரை.) ஜாலான் பார்லிமென்ட் – ஜாலான் கூச்சிங், ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் ஜாலான் பி. ரம்லி சந்திப்பு, ஜாலான் பேராக் ஜாலான் பி. ரம்லி சந்திப்பு, ஜாலான் பேராக்- ஜாலான் பினாங் சந்திப்பு. ஜாலான் ஸ்டோனர் – ஜாலான் கியா பெங் சந்திப்பு, ஜாலான் ஸ்டோனர் – பெர்சியாரான் கேஎல்சிசி சந்திப்பு.

மே 28 (காலை 8.00 மணி). கேஎல்ஐஏ துரித நெடுஞ்சாலை, எலிட் (கேஎல்ஐஏ புத்ராஜெயா, என்கேவிஇ (சுபாங் -ஜாலான் டூத்தா). கத்ரி துரித நெடுஞ்சாலை, பிளஸ் துர் ரித நெடுஞ்சாலை (சுங்கை பூலோ ஜாலான் டூத்தா). மெக்ஸ்: கோலாலம்பூர் – சிரம்பான் துரித நெடுஞ்சாலை சுங்கை பீசி – மாநகர் மையம்).
லிங்காரான் புத்ராஜெயா, ஜாலான் இஸ்தானா, ஜாலான் டாமன்சாரா. ஜாலான் துன் ரசாக், ஜாலான் அம்பாங், ஜாலான் சுல்தான் இஸ்மாயில். ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் இம்பி, ஜாலான் பார்லிமென்ட், ஜாலான் கூச்சிங்.

இக் குறிப்பிட்ட சாலைகள் கட்டங்கட்டமாக மூடப்படும். ஒவ்வொன்றும் 30 நிமிடங்களுக்கு நீடிக்கும். ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரமுகர்களும் தலைவர்களும் அவர்களின் இடத்தைச் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்வதற்கு இச்சாலைகள் மூடப்படுகின்றன என்று யுஸ்ரி கூறினார்.

இக்குறிப்பிட்ட சாலைகள் வழியில் வாகனங்களை விருப்பப்படி நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு இழுத்துச் செல்லப்படும் என்றும் அவர் நினைவுறுத்தினார். மேலும் இன்று தொடங்கி மே 28ஆம் தேதி வரை அதிகாலை 4.30 மணியில் இருந்து வர்த்தக வாகனங்களும் கனரக வாகனங்களும் கோலாலம்பூர் மாநகர் மையப் பகுதிக்குள் நுழைவது தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here