கோல திரெங்கானு: வெள்ளிக்கிழமை (மே 23) நடந்த சேவல் சண்டை சோதனையின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இந்தோனேசிய நாட்டவர் உட்பட 11 பேரை போலீசார் ஓப் டாடுவில் கைது செய்தனர்.
32 முதல் 56 வயதுடைய சந்தேக நபர்கள், இங்குள்ள கம்போங் அத்தாஸ் டோலில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்ததாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமது கைரி கைருடின் தெரிவித்தார். மதியம் 12.30 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
மாநில காவல்துறையின் D7 பிரிவு, மாநில கால்நடை சேவைகள் துறையின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட புலனாய்வுத் தகவல்களைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
நான்கு சேவல்கள், RM5,823 ரொக்கம் மற்றும் ஊசிகள், நூல், சிவப்பு மருத்துவ கட்டுகள் அடங்கிய ஒரு பையையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.









