கோலாலம்பூர்:
உலக வாழ் முஸ்லிம்களால் வரும் ஜூன் 6ஆம் தேதி ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அனைத்துலக வானியல் மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் மலேசியாவில், நாளை பிறை தென்பட்டால் தியாகத் திருநாள் ஜூன் 6 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று, அல்-சுல்தான் அப்துல்லா பகாங் மலேசியா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் டாக்டர் அஹ்மத் இர்பான் இக்மல் ஹிஷாம் இதனை கூறினார்.
ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட்டத்திற்கான தேதி நிர்ணயம் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடும் என்று அவர் சொன்னார்.





















