ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தில் (GCC)-சீனா உச்சநிலை மாநாடு, அனைத்துலக ஒத்துழைப்பில் ஒரு மைல்கல் தருணத்தைக் குறிக்கிறது. பகிரப்பட்ட அபிலாஷைகள், குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்ட மூன்று துடிப்பான நாடுகளை ஒன்றிணைக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இன்று உச்சநிலை மாநாட்டில் தனது தொடக்க உரையில் அன்வார், முதல் முறையாக, மூன்று பிராந்தியங்களும் இந்த தனித்துவமான வடிவத்தில் கூடுகின்றன – ஒவ்வொன்றும் ஒரு வளமான நாகரிக மரபு, ஆழமாக வேரூன்றிய கலாச்சாரங்கள் பகிரப்பட்ட அபிலாஷைகளுடன் என்று அவர் தெரிவித்தார்.
இவை அற்புதமான சாதனைகளால் செழித்து வளரும் பிராந்தியங்கள். ஜிசிசி நிதி வலிமை, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் மையமாக மாறியுள்ளது. ஆற்றல் அதன் முக்கிய தூணாக உள்ளது என்று அவர் கூறினார்.
சீனாவின் மாற்றம் அதன் எல்லைகளுக்கு அப்பால் நீண்டுள்ளது. பிராந்திய பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகளாவிய நிலப்பரப்பையும் மறுவடிவமைத்துள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார். வறுமையை எதிர்த்துப் போராடுவதில் அவர்களின் முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. மேலும் பொருளாதார செயல்திறன், டிஜிட்டல் மயமாக்கல் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் அவர்களின் முன்னேற்றங்கள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை என்று அவர் வலியுறுத்தினார்.









