ஊழல் தடுப்புக்கான சிறந்த நடைமுறைகளை கற்றுக்கொள்ள டென்மார்க்கிற்கு அதிகாரிகளை அனுப்ப MACC தயார்

கோலாலம்பூர்:

ஊழல் தடுப்புக்கான சிறந்த நடைமுறைகளைப் படிப்பதற்கும், அதுதொடர்பான அவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அதன் அதிகாரிகளை டென்மார்க்கிற்கு அனுப்பத் தயாராக உள்ளது.

மலேசியாவுக்கான டென்மார்க் தூதர் கிறிஸ்டின் வாங்கில்ட் பெர்னர் இன்று புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி, MACCயின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் இதைப் பகிர்ந்து கொண்டார்.

“டேனிஷ் நாடாளுமன்ற குறைதீர்ப்பாளரின் அனைத்துலக பிரிவை சேர்ந்த அதிகாரிகளின் வருகை பெரிதும் ஊக்கமளிக்கிறது என கூறிய அவர், அவர்களின் இந்த சந்திப்பு MACC க்கு ஊழல் எதிர்ப்பு வலையமைப்புகளை இலகுவாக உருவாக்க வழி வகுக்கிறது,” என்று அசாம் அந்தப் பதிவில் கூறினார்.

மேலும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் MACC உடன் ஒத்துழைக்க மலேசியாவில் உள்ள டென்மார்க் தூதரகம் தனது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here