சுவிட்சர்லாந்து: பனிச்சரிவில் புதைந்த கிராமம் – 5 பேர் மாயம்

பெர்ன்,சுவிட்சர்லாந்து நாட்டின் வாலேஸ் அருகே பனிமலை சிகரங்கள் பல அமைந்துள்ளன. இந்த சிகரத்தின் உச்சியில் ராட்சத பனிப்பாறை ஒன்று வெகு நாட்களாக தொடர்ந்து உருகி வருகின்றது. இந்த நிலையில் நேற்று அந்த ராட்சத பனிப்பாறை பயங்கர சத்தத்துடன் மலை வழியாக வேகமாக சரிந்தது.

தொடர்ந்து அந்த பனிப்பாறை முழுவதுமாக சரிந்து அடிவாரத்திற்கு வந்தது. இதன் காரணமாக மலை அடிவாரத்தில் இருந்த ஆல்பைன் என்ற கிராமம் பனிப்பாறைகள் மற்றும் பனி குவியல்களால் முழுவதுமாக மூடியது.

முன்னதாக அந்த கிராமத்தில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பனிச்சரிவு காரணமாக அந்த கிராமம் முழுவதும் பனியால் மூடியது.

மேலும் அங்கிருந்த சுமார் 100 வீடுகள் சேதமடைந்தன. மீட்புப்பணியில் ஈடுபட்ட ராணுவ வாகனம் ஒன்று திடீரென மாயமானது. அதில் இருந்த ராணுவ வீரர்கள் உள்பட சுமார் 5-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகினர். பனிச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தீவிரமாக தேடுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here