தேசிய காலநிலை மாற்ற மசோதா ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும்

ஜார்ஜ் டவுன்:

இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சகம் (NRES) ஆகஸ்ட் மாதம் தேசிய காலநிலை மாற்ற மசோதாவை தாக்கல் செய்யும் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் சிங் தூ தெரிவித்தார்.

இந்த மசோதா நிறைவடைந்துள்ளதாகவும், சட்டத்துறை தலைவர் அலுவலகத்தினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

“முன்மொழியப்பட்ட சட்டத்தை செயல்படுத்துவது மாநில அரசாங்கங்களின் அதிகார வரம்புகளை உள்ளடக்கியதால், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சகம் மாநில அரசாங்கங்களுடனான கலந்துரையாடல் அமர்வுகளை முடித்த பிறகு, இந்த மறுஆய்வு செயல்முறை நடத்தப்படுகிறது ” என்று அவர் நேற்று யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியாவில் (USM) சுற்றுச்சூழல் நிலைத்தன்மை சாலை சுற்றுப்பயணம் 2.0 அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here