பங்சாரில் உள்ள ஒரு பாரில் இரவு வெளியே சென்ற 25 வயது பிரிட்டன் ஆடவர் மே 27 முதல் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். டெய்லி மெயில் யுகேவின் படி, ஜோர்டான் ஜான்சன்-டாய்ல் தென்கிழக்கு ஆசியாவில் தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
தனது தாயார் லியான் பர்னெட்டுக்கு அவர் அனுப்பிய புகைப்படத்தின் அடிப்படையில், கோலாலம்பூரின் பங்சாரில் உள்ள ஹீலி மேக்கின் ஐரிஷ் பாருக்கு சென்றதாக நம்பப்படுகிறது. என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. யாரையும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது அவருக்கு ஏதோ நடத்திருக்கிறது என்று தான் உணர்வதாக பர்னெட் கூறியதாக மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
தன் மகனுக்கு வீட்டில் அனைவரும் எவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்பது தெரியும். அவரின் தொலைபேசி அல்லது மடிக்கணினி திருடப்பட்டிருந்தாலும், தனது மகனுக்கு தனது எண் தெரியும். மேலும் தன்னை அழைப்பதற்கான வழியைக் கண்டுபிடித்திருப்பார் என்று கூறினார். அவர் அருகிலுள்ள ஹோட்டலுக்குச் சென்று தொலைபேசியைப் பயன்படுத்தி இருப்பார் அல்லது இணைய கஃபேக்குச் செல்வார். எங்களை தொடர்பு கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடித்திருப்பார் என்று அவர் கூறினார் என்று UK நாளிதழில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Find My iPhone செயலியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இருப்பிடச் சோதனையில், அவரது தொலைபேசி கடைசியாக பாருக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் பிங் செய்ததைக் காட்டியதாக அவர் மேலும் கூறினார். மூன்று நாட்களுக்குப் பிறகு மே 30 அன்று பேட்டரி செயலிழந்ததாக நம்பப்படும்போது சிக்னல் நின்றுவிட்டது. மென்பொருள் பொறியாளரான ஜோர்டான், வியட்நாமில் இருந்து பயணம் செய்த பிறகு மே 17 அன்று மலேசியாவிற்கு வந்தார். கோலாலம்பூரில் அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மெர்சிசைட் காவல்துறை, பிரிட்டிஷ் துணைத் தூதரகம்,மலேசிய காவல்துறையிடம் காணாமல் போனவர் தொடர்பில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறைத் தலைவர் ரஸாருடின் ஹுசைன், கோலாலம்பூர் காவல்துறையிடம் இதுபோன்ற ஏதேனும் புகார்கள் உள்ளதா என சரிபார்க்க கோலாலம்பூர் காவல்துறையிடம் கேட்பதாகவும், மேலும் விசாரிப்பதாகவும் உறுதியளித்தார்.








