மாச்சாங் – பாசிர் புத்தே சாலையில் மூன்று வாகனங்களை உட்படுத்தி நிகழ்ந்த விபத்தில் ஒருவர் மரணம்

நேற்றிரவு, கிளந்தான், மாச்சாங் – பாசிர் புத்தே சாலையில் மூன்று வாகனங்களை உட்படுத்தி நிகழ்ந்த விபத்தில், ஆடவர் ஒருவர் உயிரிழந்த வேளையில் 13 பேர் காயங்களுக்கு ஆளாகினர்.

செவ்ரோலெட், பெரோடுவா கன்சில் மற்றும் புரோட்டோன் வாஜா ரகக் கார்களை உட்படுத்திய இவ்விபத்தில், காரினுள் சிக்கிக் கொண்டதால், புரோட்டோன் வாஜா ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக, மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டென்டன் அஹ்மட் ஷாபிகி ஹுசேன் தெரிவித்தார்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த Chevrolet எதிர்திசையில் நுழைந்து புரோட்டோன் வாஜா காரை மோதியதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் விவரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here