மந்தினில் RM50,000 மதிப்புள்ள மானிய விலை LPG சிலிண்டர் பறிமுதல்-KPDN

சிரம்பான்:

மந்தினில் உள்ள ஒரு சட்டவிரோத சேமிப்பு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, RM50,000 மதிப்பிடப்பட்ட மானிய விலை திரவ பெட்ரோலிய எரிவாயுவை (LPG) கடத்தும் முயற்சியை நெகிரி செம்பிலான் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) முறியடித்துள்ளது.

குறித்த கும்பலின் செயல்பாடுகளை ஒரு வார காலமாக கண்காணித்த பிறகு, Ops Gasak இன் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதன் இயக்குனர் முகமட் ஜாஹிர் மஸ்லான் கூறினார்.

வளாகத்தில் நடந்த சோதனைகளில், மானிய விலையில் எரிவாயுவை அங்கீகரிக்கப்படாத சிலிண்டர்களுக்குள் சட்டவிரோதமாக சேமித்து வைக்கவும் மாற்றும் இடமாக இது பயன்படுத்தப்படுவது தெரியவந்ததாக அவர் கூறினார்.

இந்த பரிமாற்றங்கள் பெரும்பாலும் இரவில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் பல்வேறு பிராண்டுகள் மற்றும் அளவுகளிலாலான 150 LPG சிலிண்டர்களையும், டிகாண்டிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல வணிக ஆவணங்களையும் வெற்றிகரமாக கைப்பற்றியது.

பிடிக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு RM50,000 ஐ தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த வழக்கு 1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது,

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM1 மில்லியன் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்கிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here