இன்று ஜூன் 2ஆம் தேதி மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த நாளில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டுள்ளார்.
இறைவனின் அனுகிரகத்தால் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், பேரரசியார் ராஜா ஸரித் சோஃபியா, அரசவையைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நீடூழி வாழ வேண்டுகிறேன் என்றும் தனது வாழ்த்தினைத் தெரிவித்தார்.
மேலும் மடானி அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில் அனைத்து அமைச்சர்களின் சார்பாக இந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதாக பிரதமர் அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.









