கோலாலம்பூர் மெர்டேக்கா சதுக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மோட்டார் சைக்கிளோட்டி கும்பல் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரித்து வருவதாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் Sulizmie Affendy Sulaiman தெரிவித்தர்.
அந்த கானொலியில் சுல்தான் அப்துல் சமாட் கட்டடம் முன்புறமுள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் மோட்டார் சைக்கிளோட்டிகள் கும்பலொன்று கூடியதும், பின்னர் அவர்களுக்குள் சண்டை மூண்டதும் தெரிந்தது. மேலும் ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டதோடு ஹெல்மட்டாலும் அவர்கள் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.
இதுவரை இச்சம்பவம் குறித்து யாரும் புகாரளிக்கவில்லை; இருப்பினும் வைரலான கானொலியின் அடிப்படையில் விசாரணைத் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்.










