3 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 2 பேர் பலி: 12 பேர் காயம்

கிளந்தான், ஜாலான் மாச்சாங்-பாசீர் பூத்தேவில் நேற்றிரவு மூன்று வாகனங்கள் மோதியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதோடு 12 பேர் காயமடைந்தனர். இரவு 11.15 மணிக்கு நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே  சுல்கிஃப்லி சாலே (54) உயிரிழந்த வேளையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 12 வயது சக்குவான் அப்துல்லா (12) ஆகியோர் உயிரிழந்தார்.

மாச்சாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆபரேஷன் கமாண்டர் சுஹைமி ரசாலி, உயிரிழந்த இருவரும் நான்கு பெண்களுடன் புரோட்டான் வாஜாவில் இருந்ததாக சினார் ஹரியான் தெரிவித்தது. மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் கார்களில் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது. இறந்த நபர் வாகனத்தில் சிக்கிக்கொண்டார். நாங்கள் அவரை மீட்க வேண்டியிருந்தது. இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாச்சாங் காவல்துறைத் தலைவர் அஹ்மத் ஷஃபிகி ஹுசின் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here