பெர்லிஸ், உலு பேராக், பியூஃபோர்ட் ஆகிய இடங்களுக்கு 2ம் நிலை வெப்ப அலை எச்சரிக்கை

கோலாலம்பூர்:

நேற்று (மார்ச் 24) மாலை 4.40 மணி நிலவரப்படி, பெர்லிஸ், உலு பேராக், பேராக் மற்றும் பியூஃபோர்ட் ஆகிய இடங்களில் குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு தினசரி வெப்பநிலை அதிகபட்மாக 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

தீபகற்ப மலேசியாவில் மொத்தம் 29 பகுதிகள், சரவாக்கில் மூன்று மற்றும் சபாவில் ஒரு பகுதிக்கு வெப்ப அலை எச்சரிக்கையை விடுப்பதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் அது தெரிவித்துள்ளது.

தீபகற்ப மலேசியாவில், கெடாவில் உள்ள 10 பகுதிகள் இதில் அடங்கும்: கோத்தா ஸ்டார், குபாங் பாசு, பெந்தோங், கோல மூடா, லங்காவி தீவு, சிக், பாலிங், கூலிம், போக்கோக் சேனா மற்றும் பாடாங் தெராப், அத்துடன் பேராக்கில் 4 பகுதிகள் : கிந்தா, கோல கங்சார், பத்தாங் பாடாங் மற்றும் கம்பர் ஆகிய பகுதிகள் அடங்கும்.

மேலும் , பகாங் (பேரா, மாரான், தெமெர்லோ மற்றும் ரவூப்), ஜோகூர் (தங்காக், மூவார், பத்து பஹாட் மற்றும் சிகாமாட்), மற்றும் கிளந்தான் (குவா முசாங், கோலக் கிராய், ஜெலி மற்றும் பாசீர் மாஸ்) ஆகிய நான்கு பகுதிகளும் முதல் நிலை வெப்ப அலையை பதிவு செய்துள்ளன.

கூடுதலாக, மலாக்காவில் உள்ள இரண்டு பகுதிகளும் (அலோர் கஜா மற்றும் ஜாசின்) மற்றும் நெகிரி செம்பிலானின் ஜெம்போல் ஆகிய இடங்களும் இதே போன்ற வானிலை நிலைமைகளை எதிர்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், சரவாக்கில் உள்ள மூக்கா, தெலாங் உசான் மற்றும் லிம்பாங், சபாவில் உள்ள கோத்தா பெலுட் ஆகிய இடங்களும் முதல் நிலை வெப்பத்தை பதிவு செய்துள்ளன.

முதல் நிலை வெப்ப அலை எச்சரிக்கை என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here