தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் வெப்பம், மழை மற்றும் பலத்த காற்று ஆகிய மூன்று வானிலை நிலைகளை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கவனம் செலுத்துகிறது.
மெட் மலேசியா வெளியிட்டுள்ள வானிலை கணிப்பின்படி, இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை பெய்யாது. மேலும் எல்.நினோ ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று ஜே.பி.பி.எம்-இன் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முஹமாட் தெரிவித்துள்ளார்.
வெப்பமான காலகட்டத்தில் அதிகரிக்கும் திறந்தவெளி தீ விபத்துகள், வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை தயாராக இருப்பதாக நேற்றிரவு, பினாங்கு, Padang Polo-இல் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான தீயணைப்பு துறையின் ரக்பி போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடன் அவர் இவ்வாறு தெரிவித்தார்.















