அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு

கோலாலம்பூர்:

மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி அறிவிப்புக்களை தொடர்ந்து, உலக வர்த்தக சந்தையில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இன்று காலை 8.03 மணி நிலவரப்படி, கிரீன்பேக்கிற்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 4.2165/2490 ஆக உயர்ந்தது. இந்த மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை 4.2530/2605 கப் பதிவாகியிருந்தது.

அமெரிக்க-சீனா வர்த்தக பதட்டங்கள் மற்றும் வாஷிங்டனில் இருந்து புதிய கட்டணங்கள் மற்றும் வரிகள் குறித்த கவலைகள் காரணமாக, டாலர் பலவீனமாகியதால் ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்ததாக UOB கே ஹியான் வெல்த் அட்வைசர்ஸ் SDN Bhd முதலீட்டு ஆராய்ச்சித் தலைவர் முகமட் செடெக் ஜந்தன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here