10 விழுக்காடு ஊழியர்களை குறைக்க பெட்ரோனாஸ் நிறுவனம் முடிவு

கோலாலம்பூர்:

பெட்ரோனாஸ் நிறுவனம் அதன் பணியாளர்களில் சுமார் 10 விழுக்காட்டினரைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெங்கு முஹமட் தௌபிக் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, சந்தை ஏற்ற இறக்கத்தின் எதிர்பாராத தாக்கம் அதன் லாபத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் செலவுகளைக் குறைக்க பெட்ரோனாஸ் தனது பணியாளர்களை சுமார் 10 சதவீதம் குறைக்கும் என்றார்.

இந்த நடவடிக்கை மூலம் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

அத்தோடு நிறுவனத்தின் மறுசீரமைப்புக்காக அனைத்து பதவி உயர்வுகளும் புதிய பணியமர்த்தல்களும் டிசம்பர் 2026 வரை முடக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here