இன்று அதிகாலை பேரா தாசேக் பந்திங் அருகே உள்ள ஜாலான் ஜெலி – கிரிக் என்ற இடத்தில் உப்சி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்த சம்பவத்தில் 15 பேர் மரணமடைந்துள்ளனர்.
உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
முன்னதாக தியாகப் பெருநாள் விடுமுறைக்கு பின் திரெங்கானு, கிளந்தானிலிருந்து உப்சி மாணவர்களை இன்று தங்கள் படிப்பைத் தொடங்க வளாகத்திற்கு அழைத்து வருவதற்காக இப் பேருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தில் 13 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு மாணவர்கள் கிரிக் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.









