இன்று அதிகாலை 5.30 மணிக்கு எல்.ஆர்.டி (LRT) கெலானா ஜெயா வழித்தடத்தில் திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த வழித்தடத்தின் எல்.ஆர்.டி சேவையில் பெரும் தாமதம் ஏற்ப்பட்டது என RAPID KL நிறுவனம் குறிப்பிட்டது.
எல்.ஆர்.டி சேவையில் தாமதம் ஏற்பட்டதால் பயணம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் பயணிகள் பொறுமை காக்குமாறும் மீண்டும் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேல் விபரங்களுக்கு பயணிகள் RAPID KL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களை வலம் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.









