உப்சி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துள்ளான சம்பவத்தில் 15 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரது துணையியார் வான் அஸிசாவும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மேலும் உயர்கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டுமென்றும் அவர் தமது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தியாகப் பெருநாள் முடிந்து, கிளந்தான் திரங்கானுவிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது பேரா தாசேக் பந்திங் அருகே உள்ள ஜாலான் ஜெலி – கிரிக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.









