100 ஆண்டு கனடா பல்கலைக்கழக வரலாற்றில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்

கொழும்பு:

கனடாவில், புனித ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார் குசானி சந்தகிரி.

100 வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள இந்த பல்கலைக்கழகத்தில், முதல் தடவையாக பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொள்ள சென்றவரும் இவரே.

இலங்கையில் பொறியியலில் ஒரு தேசிய டிப்ளோமா கல்வியை முடித்த குசானி சந்தகிரி, பின்னர், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணி செய்ததாகவும், அங்கு பெற்ற அனுபவம் வழி, கனடாவில் சென்று படிக்க முயற்சித்தது அது வெற்றியில் முடிந்ததாகவும் கூறுகிறார் குசானி.

தற்போது, கனடாவில் படித்துக்கொண்டே, இலங்கையில் உள்ள தமது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவதற்காக வேலை ஒன்றில் ஈடுபட்டு வருவதாகவும் இதன் பின்னர் கனடாவில் உள்ள எரிவாயு துறையில் தொடர்ந்து பணியாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here