பொது மக்களின் அடையாள அட்டையைக் கேட்கவோ அல்லது ஸ்கேன் செய்யவோ பாதுகாவலர்களுக்கு அதிகாரமோ உரிமையோ இல்லை என JPN எனும் தேசிய பதிவிலாகா அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளது. 1990-ஆம் ஆண்டு தேசிய பதிவு விதிமுறைகளின் கீழ் 5 வகை அதிகாரிகள் JPN அதிகாரிகள், போலீஸ்காரர்கள், சுங்க அதிகாரிகள், பணியில் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பதிவிலாகா தலைமை இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆகியோர் மட்டுமே அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே, பாதுகாவலர்கள் அடையாள அட்டைகளைக் கேட்டாலோ அல்லது வாங்கிவைத்திருந்தாலோ அது சட்டத்திற்கு எதிரானது மற்றும் நடவடிக்கைக்கு உட்பட்டது என JPN கூறியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக, அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபரிடமும் அடையாளஅட்டைகளை ஒப்படைக்க வேண்டாம் என்றும், ஏதேனும் மீறல்கள் இருந்தால் உடனடியாக
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் JPN பொதுமக்களுக்குஅறிவுறுத்தியுள்ளது.









