ஈப்போ:
தாப்பா அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் வடக்கு நோக்கிச் செல்லும் சாலையின் 311 வது கிலோமீட்டரில், இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று இழுவை லோரியின் பின்புறம் மோதியதில், பதினொரு பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்.
இன்று வியாழக்கிழமை (ஜூன் 12) அதிகாலை 1.28 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், ஒன்பது பயணிகளும் உதவி பேருந்து ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பினர், ஆனால் பேருந்து ஓட்டுநர் காயமடைந்தார் என்று, பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் கூறினார்.























