மலாக்கா புக்கிட் ரம்பாய், தாமான் ரம்பாயில் தாயாரையும் மூத்த சகோதரரையும் நேற்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு உதவுவதற்காக 17 வயது சிறுவன் (5ஆம் படிவ மாணவன்) ஒரு வாரத்திற்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று காவல் உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் கொலை குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
51 வயது ஆசிரியையான தாயாரும் அவரது 21 வயது சகோதரரும் அதிகாலை 5 மணியளவில் வரவேற்பரையில் இறந்து கிடந்தனர். அதே நேரத்தில் இளைய சகோதரர் 13, பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டிற்கு வெளியே 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கொலை ஆயுதமாக நம்பப்படும் 20 செ.மீ. மடிப்பு கத்தி அருகிலுள்ள பள்ளி பையில் கண்டெடுக்கப்பட்டது.









