ஜார்ஜ் டவுன்:
பினாங்கு இஸ்லாமிய பாலர் பள்ளி (Tadis) ஆசிரியர்களுக்கான உதவித்தொகை மாதத்திற்கு RM400 யினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி அவர்கள் மாதாந்திர உதவித் தொகையாக RM1,400 வெள்ளியை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பாலர் பள்ளி உதவியாளர்கள் இப்போது மாதந்தோறும் RM1,200 பெறுபவர்களுக்கு, இது RM200 ஆல் அதிகரிக்கப்படும் என்று, பினாங்கு இஸ்லாமிய மத கவுன்சிலின் தலைவரான துணை முதல்வர் I டத்தோ டாக்டர் முகமது அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.
இந்த அதிகரிப்பு 40 ஆசிரியர்களுக்கும் 21 உதவியாளர்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் சொன்னார்.





















