எஸ்பிஎம் தேர்வை முடித்த 150,557 மாணவர்களுக்கு அரசாங்க உயர்கல்வி நிலையங்களில் வாய்ப்பு .

புத்ராஜெயா, 

2024 எஸ்பிஎம் தேர்வை எழுதி முடித்த மாணவர்கள் யுபியு ஆன்லைன் மூலம் அரசாங்க உயர்கல்வி மையங்களில் உயர்கல்வி யைத் தொடர்வதற்கு விண்ணப்பம் செய்த அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி அமைச்சு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரி வித்துக் கொள்கிறது.

இதில் அரசாங்கப் பல் கலைக்கழகம், பாலி டெக்னிக் கல்லூரி, சமூகக் கல்லூரி, மாரா உயர்கல்விப் பிரிவு ஆகியவற்றில் உயர்கல்வியைத் தொடர் வதற்கு உயர்கல்வி அமைச்சு 2025ஆம் ஆண்டில் 223,624 விண்ணப் பங்களைப் பெற்றிருக்கிறது. இதில் 150,557 மாண வர்கள் (67.33 விழுக்காடு) வாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்று கல்வி அமைச்சு வெளியிட் டிருக்கும் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில் 86,589 மாணவர்கள் அரசாங்கப் பல்கலைக்கழகங்களிலும் 42,058 மாணவர்களுக்கு பாலி டெக்னிக் கல்லூரிகளிலும் 20,427 மாணவர்களுக்கு சமூகக் கல்லூரிகளிலும் 1,483 மாணவர்களுக்கு மாரா உயர் நிலைக் கல்வி மையங்களிலும் வாய்ப்பளிக் கப்பட்டுள்ளது. பி40 பிரிவில் இருந்து 16,189 பேருக்கும் உடற்பேறு குறைந்தவர் களுக்கு 590 பேருக்கும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த 593 பேருக்கும் ஓராங் அஸ்லி பிரிவைச் சேர்ந்த 321 பேருக்கும் இந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

43 பேருக்கு சமூக நல இலாகா மூலம் வாய்ப்பளிக்கப்பட் டிருக்கிறது. மொத்தம் 349 கல்வித் திட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன. இவற்றுள் 41 சான்றிதழ், 55 ஃபவுண்டேஷன், 252 டிப்ளோமா, ஓர் இளங்கலைப் பட்டம் ஆகிய படிப்புகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டது. வாய்ப்பு பெறாத மாணவர்கள் 2025 ஜூன் 16ஆம் தேதியில் இருந்து 2026 ஜூன் 26ஆம் தேதி மாலை 5.00 மணி வரை 10 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here