முன்னாள் மஇகா தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் இன்று காலை கோலாலம்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பகாங், கேமரன் மலை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் மஇகாவின் கட்சியின் 8ஆவது தலைவராக பதவி வகித்தவர்.
அவர் அரசாங்கத்தில் பல பதவிகளை வகித்துள்ளார். அவர் வகித்த பதவிகளின் விவரங்கள்
மே 2013 முதல் ஜூலை 2015 வரை மலேசிய இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் அமைச்சர் (Minister of Natural Resources and Environment);
ஆகஸ்டு 2011 முதல் மே 2013 வரை பிரதமர் துறை அமைச்சர் (Minister in the Prime Minister’s Department);
தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் துணை அமைச்சர் (Deputy Minister of Plantation Industries and Commodities);
ஊரக வளர்ச்சி துணை அமைச்சர் (Deputy Minister of Rural Development);
மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் (Deputy Minister of Welfare and Family Development) ஆகிய பதவிகளை வகித்தவர்.









