News By M.Anba
பாங்கி,
மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாடு அமைச்சின் (KPWKM) திறன் மிக்க பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு சிறப்பு அங்கீகாரத்துவ நற்சான்றிதழ் கள் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது. மேன்மைமிகு அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாக (KPWKM)அமைச்சகத்தைச் சேர்ந்த 24 பணியாளர்களும் சமூக நல இலாகாவின் (JKM) 525 ஊழியர்களுக்கும் தேசிய மக்கள் தொகை, குடும்ப மேம்பாட்டு வாரியத்தின் (LPPKN) 72 பணியாளர்களும் மகளிர் மேம்பாட்டு இலாகாவின் (JPW) 19 ஊழியர்களுக்கும் மலேசிய சமூக நிறுவனத்தின் (ISM) 6 ஊழியர்களுக்கும் KPWKM- APC சிறப்பு அங்கீகாரத்துவ நற்சான்றிதழ்களை பாங்கி எவென்யூ மாநாட்டு மையத்தில் ஜூன் 17ஆம் தேதி மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாடு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜா நான்சி ஷுக்ரி வழங்கிச் சிறப்பித்தார்.

அமைச்சின் பணியாளர்களின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பின் அடையாளமாக 646 பேருக்கு KPWKMAPC நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிப்பது தனிச்சிறப்பாகும் என்றார் அவர்.

பணியாளர்கள் தங்களது தரமான சேவைகளை வழங்கி சிறந்த மலேசியாவை வளப்படுத்தவோம் என்றும் மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாடு அமைச்சின் அனைத்து பணியாளர்களும் தனித்துவமான சேவையை வழங்க முடியுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.









