கோத்தா பாரு, பாசீர் புத்தேயில் உள்ள கம்போங் துவாலாங் திங்கி அருகே உள்ள ஆற்றில் நேற்று ஒரு ஆணின் உடல் மிதந்து கண்டெடுக்கப்பட்டது. பாசீர் புத்தே காவல்துறைத் தலைவர் சய்சுல் ரிசால் ஜகாரியா கூறுகையில், இந்த சடலம் குறித்து பிற்பகல் 3.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்றார்.
செலிசிங் காவல் நிலையம் மற்றும் பாசீர் புத்தே மாவட்ட காவல் தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு ஆற்றில் கிடந்த சடலத்தை மீட்டதாக அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். முதற்கட்ட சோதனைகளில் அந்த இடத்தில் எந்த குற்றவியல் செயல்களும் காணப்படவில்லை. உடல் தெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.