பகாங் மாநிலத்தில் வேகமாக பரவும் டிங்கி காய்ச்சல்: மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் .

News By P.Rama Moorthy

மெந்தகாப், 

பகாங் மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து வேகமாக பரவி வரும் நிலையில், பொது மக்கள் அதிக விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் 8 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான வாரத்தில் மட்டும் 26 புதிய டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 11 சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், குறிப்பிட்ட காலப்பகுதியில், குவாந்தான் மாவட்டத்தில் 1, தெமர்லோ மாவட்டத்தில் 2 மற்றும் ரவுப் மாவட்டத்தில் 1 புதிய தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 14 வரை பகாங் மாநிலம் முழுவதும் 485 டிங்கி பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது சற்று நெறிமுறை அமைக்கிறது.

படம்: தெமர்லோ மாவட்ட நகராண்மைக் கழக உயர் அதிகாரி ரிசல் பின் முஸ்தபா, தாமான் ரிம்பா கேஆர்டி தலைவர் ம.தருமசீலன் , சுகாதார இலாகா அதிகாரி. Yahoo Mail: Search, organise, conquer

மாவட்ட வாரியாக பதிவான டிங்கி பாதிப்பு எண்ணிக்கைகள் பின்வருமாறு: லிப்பிஸ் – 12, ரவுப் – 62, பெந்தோங் – 21, ஜெராண்டுட் – 26, பெரா – 6, மாரான் – 19, குவாந்தான் – 172, பெக்கான் – 21, ரொம்பின் – 66, தெமர்லோ – 80.

இதில், தெமர்லோ மாவட்டம் மெந்தகாப் பகுதியில் உள்ள தாமான் ரிம்பா குடியிருப்பில் மட்டும் 8 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தெமர்லோ மாவட்ட நகராண்மைக் கழகத்தின் உயிர் அதிகாரி ரிசல் பின் முஸ்தபா, சுகாதார அதிகாரிகள் மற்றும் கே.ஆர்.டி தலைவர் ம. தருமசீலன் ஆகியோர் ஜூன் 18 அன்று காலை 11 மணியளவில் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதி மக்களிடம் டிங்கி காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த, அடிக்கடி ஏடிஸ் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here