News By K.Kalai
சிரம்பான்,
மேட்ரிக்ஸ் கான் சப்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் நேற்று தனது ரிசோர்ட் வில்லா திட்டத்தின் வீட்டு மனைத் திட்டத்தின் திறப்பு விழாவை விமரிசையாகக் கொண்டா டியது. இந்த விழாவில், புதிய வீடு வாங்கிய குடும்பங்களுக்கு வீட்டுச் சாவிகள் வழங்கப் பட்டன.
இந்த விழா, வீடுகள் மட்டுமன்றி ஒரு தரமான வாழ்க்கைமுறை, நன்கு திட்டமிடப்பட்ட வாழ்விய லின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதேநேரம், ரிசோர்ட் வில்லா திட்டம் ‘மலேசியா CIDB QLASSIC தர மதிப்பீட்டில் 88% என்ற உயரிய மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. இது நாட்டில் தரமான தரைக் குடியிருப்புகளுக்கான பிரிவில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேட்ரிக்ஸ் நிறுவனக் குழு நிர்வாக இயக்குநர் கெல்வின் 80%க்கும் மேற்பட்ட கிளாசிக் மதிப்பீட்டைப் பெறுவது மிகவும் சவாலான ஒன்று. இது எங்கள் குழுவின் கடுமையான உழைப்பு மேலும் ஒவ்வொரு கட்டத்திலும் எடுத்துக்கொள்ளப்பட்ட நேர்த்தியான செயல்பாடுகளால் சாத்தியமானது என அவர் தெரிவித்தார். பயனீட்டாளர்கள் தற்போது தரம் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்.
அதற்கேற்ப உயர்தர வீடுகளை வழங்குவதே எங்கள் இலக்கு என. மேலும் தெரிவித்தார். இந்தச் சாதனை, திட் வடிவமைப்பு. பொறியியல், கட்டுமான வேலை ஆகிய அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைந்த முயற்சியின் பலன் என அவர் மேலும் கூறினார். மேட்ரிக்ஸ் நிறுவனத்தின் நோக்கம் தரம், பயன்பாடு, நிலையான வாழ்க்கைமுறை அடிப்படையிலான சமூகங்களை உருவாக்குவதே ஆகும் என கெல்வின் லீ மேலும் கூறினார்.









