தந்தையைக் கொலை செய்ததாக நம்பப்படும் மகன் கைது

ஈப்போ:

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) இரவு தாமான் தாசெக் டமாயில் உள்ள வீட்டில் தனது தந்தையைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 31 வயது நபர் இன்று புதன்கிழமை (ஜூன் 25) முதல் ஏழு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அவரது வீட்டின் முன் அதிகாலை 12.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும், கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஈப்போ காவல்துறைத் தலைவர் ஏசிபி அப்பாங் ஜைனல் அபிடின் அபாங் அகமட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here