தனது வளர்ப்பு மகளை துன்புறுத்தியதன் தொடர்பில் பெண் கைது

கோல சிலாங்கூர், தாமான் பெண்டஹாராவில் தனது வளர்ப்பு மகளை துன்புறுத்தியதோடு அவரை புறக்கணித்தது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக நேற்று ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோல சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் அசாஹருதீன் தாஜுடின், 54 வயது பெண்ணை கைது செய்வதற்கு முன்பு அதே நாளில் சம்பவம் குறித்த புகார் கிடைத்ததாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் தஞ்சோங் காராங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபருக்கு இன்று முதல் ஜூலை 4 வரை ஆறு நாட்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வழக்கு பற்றிய தகவல்களை அறிந்த பொதுமக்கள் கோலா சிலாங்கூர் மாவட்ட காவல் தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 03-32891222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்தையும் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு 2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டம் பிரிவு 3(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. முன்னதாக, பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுன. அவற்றில் சில பாதிக்கப்பட்டவரின் கைகள், தலையில் ஏற்பட்ட காயங்களைக் காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here