விரிவாக்கம் செய்யப்பட்ட எஸ்எஸ்டி வரி இன்று முதல் அமலாக்கம்

கோலாலம்பூர், 

மலேசிய மடானி அரசாங்கம் விற்பனை. சேவை வரியை (எஸ்எஸ்டி) இன்று முதல் அமலாக்கம் செய்கிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட எஸ்எஸ்டி வரி 6 விழுக்காட்டில் இருந்து 8 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. மடானி அரசாங்கத்தின் நிதி மறுசீரமைப்பு முயற்சியின் அகண்ட நடவடிக்கையின் வழி இந்த வரி விரிவாக்கம் கண்டிருக்கிறது. இப்புதிய அமலாக்கமானது ஆண்டுக்கு 300 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வருமானத்தை உருவாக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) ரத்து செய்யப்பட்ட பின்னர் எஸ்எஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. 6 விழுக்காடாக இருந்த வரி தற்போது 8 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தாய்லாந்தில் 16 விழுக்காடு, வியட்நாமில் 19 விழுக்காடு என இந்த வரி அமல்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் மலேசியாவில் எஸ்எஸ்டி வரி 8 விழுக்காடு என்ற நிலையில் அமல்படுத்தப்படுகிறது.

ஜிஎஸ்டி ஒவ்வொரு பொருளுக்கும் விதிக்கப்பட்ட நிலையில் எஸ்எஸ்டி மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கும் பழங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.எஸ்எஸ்டி தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கும் சேவைகளுக்கும் மட்டுமே விதிக்கப்படுகிறது. பெரும்பகுதி இந்த வரியால் பாதிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here