சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களிலும் நெகிழி பைகள் இல்லா நாள் அமல்

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களிலும் நெகிழி பைகள் இல்லா நாளை அமல்படுத்துவதற்கான செயலதிட்டங்கள் இறுதிக்கட்டத்தில் இருப்பாதாக மாநில பொது சுகாதாரச் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

நெகிழி பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் சில துணைச் சட்டங்களில்  சிலாங்கூர் அரசு  திருத்தம் செய்து வருகின்றது. அது தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் நெகிழி மாசுபாட்டை முறையாக நிவர்த்தி செய்வதற்கான மூன்று அம்ச அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக ஜமாலியா தெரிவித்தார். மேலும் அதன் சட்டத் திருத்தங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நெகிழி பைகள் இல்லா நாள் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here