சிலாங்கூர் மாநிலத்தில் 1,020 இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கான அடையாளங்களைக் காட்டியுள்ளதாக, இன்று நடந்த மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 36,428 மாணவர்களில் 2.8% பேர் Pesakit Health Questionnaire (PHQ) மூலம் மேற்கொண்ட சோதனையில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது என்று பொது சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் EXCO ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
மேலும் “intervensi minda sihat” திட்டம் தற்போது 5ம் மற்றும் 6ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்கப்படும். இதன் நோக்கம், மாணவர்களிடையே மனநல அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மனவளத்தை உருவாக்குவதாகும்.
அத்துடன், மனநலம் மேம்பாட்டு திட்டங்கள், கவுன்சிலிங், உணர்வுகளை அறிதல், மன அழுத்த மேலாண்மை, கோபக் கட்டுப்பாடு, நேர்மறை சிந்தனை மற்றும் சிறந்த தொடர்பு திறன்களை உருவாக்கும் வகையில் பயிற்சிகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இத்திட்டங்கள் அனைத்தும் மாணவர்களின் மனநலம் மற்றும் நலத்திற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.









