எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சியடைந்த 159 மாணவர்கள் கௌரவிப்பு – கோத்தா கெமுனிங் எம்கே பிரகாஷ் வழங்கினார்

News By P.R.Jayaseelan

ஷா ஆலம் ,

2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் (SPM) தேர்வில் சிறப்புத் தேர்ச்சியடைந்த 159 மாணவர்களுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் ரொக்கப் பரிசுடன் கௌரவிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், 8 ஏ முதல் 12 ஏ வரை பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் RM38,400 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

12 ஏ பெற்ற மாணவருக்கு RM400, 11 ஏ பெற்ற 6 மாணவர்களுக்கு தலா RM350, 10 ஏ பெற்ற 22 மாணவர்களுக்கு தலா RM300, 9 ஏ பெற்ற 66 மாணவர்களுக்கு தலா RM250 மற்றும் 8 ஏ பெற்ற 64 மாணவர்களுக்கு தலா RM200 வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர் ஒருவருக்கு சிறப்பு செய்கிறார் பிரகாஷ்

மாணவர்கள் மட்டும் அல்லாது, அவர்களின் கல்வி பயணத்தில் துணையாக இருந்த பெற்றோர்களும், வழிகாட்டிய ஆசிரியர்களும் இந்த விழாவில் பாராட்டப்பட்டனர். “இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். இவை அவர்களது வெற்றிப் பயணத்தின் முதல்படி மட்டுமே. இன்னும் பல சாதனைகள் காத்திருக்கின்றன,” என்று எம்கே பிரகாஷ் உற்சாகமாக கூறினார்.

இந்த விழாவில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் மூத்த உதவி இயக்குநர் அசிலாவாத்தி பிந்தி அபு பாக்கார், ஷா ஆலம் மாநகர மன்ற உறுப்பினர்கள், வட்டார தலைவர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here