சமூக வணிக மேடையாக ‘‘Ayuh Malaysia’ வை அறிமுகப்படுத்துகிறார் ரஃபிசி ரம்லி.

பெட்டாலிங் ஜெயா,

முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி, வரும் ஜூலை 27ஆம் தேதி, ‘Ayuh Malaysia’ என்ற சமூக வணிக மேடையை (Social Enterprise Platform) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளார்.

இது, சமீபத்திய PKR தலைமை தேர்தலில் அவர் எதிர்கொண்ட தோல்விக்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.

“அரசியலுக்கு வெளியேயும், சமூக மாற்றங்களை ஏற்படுத்த ஒரு முயற்சி இது. இது பொதுவான வணிகங்களி ற்கோ அல்லது நன்கொடைகளுக்கோ மட்டுமே சார்ந்துள்ள அமைப்பு போல் அல்ல. இதன் மூலம் உள்ளூர் சமூகங்கள் சுயாதீனமாகவும், நீடித்த வருமானம் உருவாக்கும் விதமாகவும் செயல்படலாம்.” என்கிறார் அவர்.

‘‘Ayuh Malaysia’, தொழிலில் ஈடுபடும் சமூகங்களை ஒன்றிணைக்கும் “one-stop platform” ஆகவும்,
அவர்களுக்கு தேவையான நிபுணத்துவ ஆலோசனைகள் மற்றும் நிதி ஆதரவுகளை வழங்கும் ஒரு மேடையாகவும் செயல்படும்.

பயனாளிகள் மற்றும் சமூக வணிகங்களுக்கிடையே நேரடி இணைப்பு வழங்கும், மற்றும் ஊழியர்களுக்கும் சமூகத்திற்கும் மீண்டும் லாபங்களை வழங்கும் வணிக வடிவம் இது எனவும் அவர் விளக்கியுள்ளார்.

“அரசியல் நிலைமைகள் குழப்பமாக இருந்து வரும் நிலையில், நிலையான சமூக அமைப்புகளை உருவாக்குவதே நம் சமூகத்தின் வலிமை,” என்று ரஃபிசி வலியுறுத்தினார்.

PKR துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அவர், மே மாதம் நடந்த தேர்தலில் நூருல் இஸா அன்வாரிடம் தோற்றதையடுத்து, கடந்த மாதம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here