பேராக்கில் 3 நாடுகள் பங்கேற்கும் இராணுவப் பயிற்சி

 மலேசிய இராணுவம், அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய படைகளுடன் இணைந்து பேராக்கின் பல இடங்களில் அடுத்த வியாழக்கிழமை முதல் 14 நாட்களுக்கு கெரிஸ் ஸ்ட்ரைக் 2025 பயிற்சியை மேற்கொள்ளும்.

மலேசிய இராணுவத்தின் அறிக்கையில், ஈப்போ, சுங்கை சிப்புட், கோல கங்சார், லெங்காங் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் இந்தப் பயிற்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் பயிற்சி, கூட்டு செயல்பாட்டுத் திறன்களை வலுப்படுத்துவதையும், நட்பு நாடுகளுடன் இராணுவ உறவுகளை ஆழப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதில் மலேசிய இராணுவத்தின் தயார்நிலையையும் இது மேம்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ஈப்போ மற்றும் கோல காங்சாரில் வசிப்பவர்கள், இந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டுப் படைகளின் இருப்பு, இராணுவ வாகனங்கள், வாகனத் தொடரணிகளின் இயக்கம் அல்லது பிற இராணுவ நடவடிக்கைகளால் அச்சப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here