கோலாலம்பூர் :
துருக்கியேயின் போலுவில் உள்ள கர்தல்காயா ஸ்கை ரிசார்ட்டில் உள்ள கிராண்ட் கர்தல் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 76 பேர் உயிரிழந்தனர் அதேநேரம் 51 பேர் காயமடைந்தனர்.
அங்காராவில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள துணைத் தூதரகத்தின் தகவலின்படி, இந்த விபத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், இருப்பினும் அங்குள்ள நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் “துருக்கியே குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மலேசிய அரசாங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த கடினமான நேரத்தில் மலேசியா ஒற்றுமையுடன் அம்மக்களுக்கு நிற்கிறது, மேலும் அவர்களின் வலிமை மற்றும் மன உறுதிக்காக பிரார்த்தனை செய்கிறது” என்று விஸ்மா புத்ரா எனப்படும் மலேசிய வெளியுறவு அமைச்சகம் இன்று புதன்கிழமை (ஜனவரி 22) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.





















