கொழும்பு,
2025 ஜூன் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் தமது நாட்டுக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டாலர் பணமனையீடு செய்துள்ளனர் என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆ
ண்டு ஜூன் மாதத்தை விட 22% அதிகரிப்பை காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான மொத்தமாக அனுப்பப்பட்ட தொகைகூட 6.57 பில்லியன் டாலராக இருந்துள்ளது. ஆனால் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை மொத்தமாக 5 மாதங்களில் மட்டும் 3.7 பில்லியன் டாலர் அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியை விட 18.9% அதிகரிப்பாக உள்ளது என கூறப்படுகிறது.
வெளிநாட்டுதில் இருந்து வரும் அந்நிய செலாவணி இலங்கையின் முக்கிய வெளிநாட்டு வருமான ஆதாரங்களில் ஒன்றாக தொடர்ந்து உள்ளன. 2025 ஆம் ஆண்டில் இதுவரை 3.12 லட்சம் இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என்றும் அதிகாரப்பூர்வ தரவுகள் குறிப்பிடுகின்றன.





























