டெல்லியில் மாயமான பல்கலை. மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு

புதுடெல்லி,திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். டெல்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்த இவர் கடந்த 7 ஆம் தேதி மாயமானார். இதையடுத்து , அங்குள்ள போலீஸ் நிலையத்தில் மாணவி மாயமானது குறித்து புகாரளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையின் போது, “சினேகா தேப்நாத் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யவுள்ளதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கிவிட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்தார். இதையடுத்து யமுனை ஆற்றில் தேடும் பணி நடைபெற்றது. நிகம் போத் காட் முதல் நொய்டா வரையிலான பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் உள்ளூா் காவல்துறை உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், கீதா காலனி மேம்பாலம் அருகே சினேகாவின் சடலத்தை மீட்புக் குழுவினர் நேற்று இரவு மீட்டனர். மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.

(எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல; தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here