குவாந்தான்: கடந்த மாதம் போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி, ஹோட்டல் ஹவுஸ்கீப்பிங் மேலாளர் ஒருவர் 211,000 ரிங்கிட்டை இழந்தார். பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறுகையில், 49 வயதான அந்த நபர் முதலில் ஃபேஸ்புக்கில் முதலீட்டுச் சலுகையைப் பார்த்ததாகவும், பின்னர் வாட்ஸ்அப் மூலம் ஒரு பெண்ணைத் தொடர்பு கொண்டதாகவும் கூறினார்.
அந்தப் பெண் அதிக வருமானம் ஈட்டி தருவதாக உறுதியளித்து, பாதிக்கப்பட்டவருக்கு முதலீட்டில் சேர இணைப்பைக் கொடுத்தார். பின்னர் ஜூன் 4 முதல் ஜூன் 11 வரை தனது சொந்த சேமிப்பைப் பயன்படுத்தி இரண்டு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ஆறு முறை பணம் செலுத்தினார் என்று அவர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் பணம் செலுத்துமாறு கேட்டபோது, ஆனால் எந்த வருமானமும் கிடைக்கவில்லை என்பதனை பாதிக்கப்பட்டவர் உணர்ந்து, நேற்று குவாந்தான் மாவட்ட காவல் தலைமையகத்தில் காவல் புகார் அளித்ததாகவும் இந்த வழக்கு தண்டனைச் சட்டப் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் யஹாயா கூறினார்.








