காராக் விரைவுச்சாலையில் ஏற்பட்ட தீ: 10 டன் லோரி முற்றாக அழிந்தது

காராக் விரைவுச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 டன் லோரி கிட்டத்தட்ட முற்றிலுமாக எரிந்து நாசமானது. புதன்கிழமை (ஜூலை 16) காலை சுமார் 7.24 மணியளவில் பேரிடர் அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முகலிஸ் முக்தார் தெரிவித்தார்.

கெந்திங் செம்பாவுக்குப் பிறகு வெளியேறும் இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தீ விபத்தில் லோரி 90% எரிந்து விட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மொத்தம் 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார். இதுவரை, சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here