பகாங்:
குவந்தான் மாவட்டத்தில் குடிவரவு துறையின் அதிரடி சோதனை நடவடிக்கையில் 29 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கை இன்று அதிகாலை 12 மணி முதல் 5 மணி வரை, குவாந்தான் மாவட்டத்திலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. குறைந்தபட்சம் 18 அதிகாரிகள் பங்கேற்ற இந்த சோதனை, பொது மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என மலேசிய குடிநுழைவுத் துறையின் முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 34 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 29 பேர் கைது செய்யப்பட்டடாகவும் Immigration Act 1959/63 சட்டத்தின் கீழ் 14 நாட்கள் கெமாயான் (Kemayan) குடிநுழைவு தடுப்பு மையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சட்டத்திற்குப் புறம்பாக வேலை கொடுத்த முதலாளிகள் மற்றும் தங்கவைத்த இட உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் பகாங் மாநிலத்தில் தங்களின் பகுதியிலுள்ள சட்டவிரோத வெளிநாட்டவர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து, நாட்டின் சட்ட ஒழுங்கு மற்றும் வேலை வாய்ப்புத் தடையை வலுப்படுத்த உதவுமாறு குடிநுழைவுத் துறை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.





















