சிரியா:
தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆசிய நாடான தெற்கு சிரியாவில், சுவைடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்தவர்களும், சன்னி பெடோயின் பழங்குடியினரும் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். ட்ரூஸ் என்பது 10ம் நுாற்றாண்டில் உருவான ஷியா முஸ்லிம் பிரிவில் இருந்து உருவான இஸ்மாயிலிசத்தின் அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால், இவர்கள் முஸ்லிம்கள் இல்லை.
இந்நிலையில், பலி எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஸ்வீடா மாகாணத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் சிரியா அரசு இறங்கியுள்ளது. சோதனைச் சாவடிகளில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருதரப்பு மோதலை கட்டுப்படுத்த சிரியா அரசு ராணுவ துருப்புகளை அனுப்பி உள்ளது. ட்ரூஸ் அமைப்பினர் மீது சிரிய ராணுவ அத்துமீறுவதாக இஸ்ரேல் ராணுவம் வான்வழித்தாக்குதலை நடத்தியது.







